Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீன்களுக்கு ஒரு பிடி பொரி போதும்: சகல ... குலசை., முத்தாரம்மன் கோயிலில் ரூ.28,59,275 உண்டியல் வசூல் குலசை., முத்தாரம்மன் கோயிலில் ரூ.28,59,275 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்கொட்டை திருவிழா: மேலூருக்கு எழுந்தருளிய திருவாதவூர் திருமறைநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாங்கொட்டை திருவிழா: மேலூருக்கு எழுந்தருளிய திருவாதவூர் திருமறைநாதர்

பதிவு செய்த நாள்

17 மே
2024
02:05

மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி அம்பாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர்.

திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழா மே 12 வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மே 14 முதல் மே 16 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாங்கொட்டை திருவிழாவிற்கு இன்று (17 ம்தேதி) திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சுவாமிகளை வரவேற்றனர். மேலுார் நுழை வாயிலில் தாசில்தார் முத்துபாண்டியனுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. பகல் முழுவதும் மேலுாரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த திருமறைநாதர் நாளை அதிகாலை மேலுாரில் இருந்து மீண்டும் திருவாதவூர் கோயிலுக்கு புறப்பட்டார். மே 20 ல் திருக்கல்யாணமும், மே 21 ல் தோரோட்டமும், மே 22 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் சீனிவாசன், ருக்மணி, துணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் யக்ஞநாராயணன், பேஷ்கார் பிரபு செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar