காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், புவனேஸ்வரி அம்பாள் சமேத பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 2022ம் ஆண்டு, மே- 18ல் மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்து முடிந்தன. இரண்டாவது ஆண்டை முன்னிட்டு, நேற்று காலை, சம்வத்ஸராபிஷேகம் நடந்தது. இதையடுத்து, இன்று காலை ,கலச பூஜையும், 108 சங்காபிஷேக விழாவும் நடைபெற உள்ளன. இந்த நாள் முழுவதும், லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.