முத்துமாரியம்மன், சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 03:05
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முத்துமாரியம்மன், சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் விநாயகர், முத்துமாரியம்மன், சஞ்சீவிராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 17ம் தேதி காலை வாஸ்துசாந்தி பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. 19ம் தேதி காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கோபுர கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.