Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதிரை வாகனத்தில் உலா வந்த வடபழநி ... திருமலையில் நாளை நரசிம்ம ஜெயந்தி; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் திருமலையில் நாளை நரசிம்ம ஜெயந்தி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழை நீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழை நீர்

பதிவு செய்த நாள்

21 மே
2024
10:05

கரூர்; கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, கன மழை பெய்தது. பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது, தென்மேற்கு வங்க கடலில் உருவான, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்காக நகர்ந்து வரும், 24ல் வங்க கடலின் நடுப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 முதல், 4:30 மணி வரை கரூர் மாவட்டத்தில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது. குறிப்பாக கரூர் நகரம், வெள்ளியணை, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெங்கமேடு, வாங்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் வாங்கல் சாலை, ஜவஹர் பஜார், கோவை சாலைகளில் மழை நீர் சிறிது நேரம் ஓடியது. மேலும், கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்தது. இதனால், நேற்று மாலை பிரதோஷ விழாவுக்கு வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். கோவிலில் இருந்து மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar