காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 05:05
காரைக்கால்; காரைக்கால் மேலகாசாகுடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மஹாத்ஸ்வம் முன்னிட்டு பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாகுடி கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி,வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவிலில் மஹாத்ஸ்வம் முன்னிட்டு கடந்த 6ம் தேதி மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில்களில் பூச்சொறிதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காவடி எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஊர்வலமாக சென்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பத்திரகாளியம்மனுக்கு கும்ப பூஜை, அக்னி கப்பறை நடைபெற்றது. இன்று காளியம்மன் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கெளரவ ஆலோசகர் ராஜகுரு, அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.