புத்த பூர்ணிமா; அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 10:05
உத்தரப்பிரதேசம்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அயோத்தி ராமர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அலகாபாத்தில், புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, கங்கை, யமுனை மற்றம் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு செய்தனர்.