Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புவனேஸ்வரி அம்மன் கோயில் ... ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

23 மே
2024
11:05

திருக்கனுார்; வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் உற்சவம் கடந்த 20ம் தேதி ஐயனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் (21ம் தேதி) காலை 9:00 மணிக்கு முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன்– பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன்பெற வேண்டி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக் கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சம், கொய்யா, நெல்கதிர், பனங்காய்(நுங்கு), வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன. இதில், வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று( 22ம் தேதி) மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், இன்று (23ம் தேதி) ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், நாளை (24ம் தேதி) செடல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar