Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுஷத்தில் அவதரித்த அற்புதர்; ... சேஷ வாகனத்தில் உலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் உலா வந்த காஞ்சிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா; அதிஷ்டானத்தில் மஹாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா; அதிஷ்டானத்தில் மஹாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 மே
2024
12:05

காஞ்சி ; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் விழாவை முன்னிட்டு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம், இன்று மே 22 முதல் 24 வரை ஸ்ரீமடத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத மூலாம்நாய சர்வக்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதிகளின் பரம்பரையில் 68-வது பீடாதிபதியாக ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தை அலங்கரித்து அருள்பாலித்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 131-வது ஜெயந்தி விழா க்ரோதி வருஷம் வைகாசி மாதம் 11ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை (24-05-2024) காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தம் வாழ்க்கையிலும், எண்ணத்திலும், வாக்காலும் பக்தர்களின் வாழ்வில் உத்வேகத்தை ஏற்படுத்திய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 1994 ஆம் ஆண்டு முக்தி அடைந்தாலும் இன்றும் பிருந்தாவனத்தில் சைதன்யத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆக்ஞானுஸாரம் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 131-ஆவது ஜயந்தி மஹோத்ஸவம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உற்வச தினங்களில் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாஸங்கள், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் இசைக்கச்சேரிகள் முதலியன நடைபெறும். ஜயந்தி தினமான இன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் ஸ்ரீ மஹாருத்ர ஜப ஹோமம் முதலியன நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு ப்ருந்தாவனத்தில் மஹாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து சங்கீத உபன்யாஸம், கேரளா. வித்வான் சந்த்ரமனா சஜீவ் நம்பூதிரி. பாட்டு பத்மபூஷன், ஹரிகதா ரத்னா. ப்ரவசனாம்ருத நாதவர்ஷி. மதுரை. T.N.சேஷகோபாலன் குழுவினர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar