Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; ... 131வது ஜெயந்தி விழா; மலர் அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர்.. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை 131வது ஜெயந்தி விழா; மலர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் திருக்கோஷ்டியூர் பெருமாள்; மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் திருக்கோஷ்டியூர் பெருமாள்; மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்சம்

பதிவு செய்த நாள்

24 மே
2024
04:05

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்சம் வைபவம் கருவேல்குரிச்சி மணிமுத்தாறில் நடந்தது.

வைணவத்தலங்கள் 108 ல் ஒன்றான  திருக்கோஷ்டியூர்  ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் கஜேந்திர மோட்ச விழா  வசந்த உற்ஸவமாக  ஆண்டுதோறும் நடக்கிறது. நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் கோயிலிலிருந்து புறப்பாடாகி கருவேல்குரிச்சி மணிமுத்தாறு ஆற்றங்களையில் எழுந்தருளினார்.  அங்குள்ள மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து உச்சிக்கால பூஜைகள் நடந்தன. பின்னர் மாலையில் நவகலஸ திருமஞ்சனம் நடந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  பின்னர் பத்தி உலாத்துதலாக மண்டபத்ததை சுவாமி மும்முறை வலம் வந்தார். பின்னர் சாயரட்சை பூஜை நடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் நடந்தது.  இன்று அதிகாலை 5:30 மணிக்கு சவுமியநாராயணப் பெருமாள் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளி கருவேல்குரிச்சி கிராமத்தினரால் புறப்பாடாகி ஆத்தங்கறையில் எழுந்தருளினார். பட்டச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து கோயில்யானைக்கு பட்டாச்சார்யர்கள் கஜேந்திர மோட்ச பூஜைகளை செய்தனர்.  ஆற்றில் இறங்கிய யானை மும்முறை பிளிற, பெருமாளின் சந்தனம், சடாமி ஆண்டாள் யானைக்கு சாத்தப்பட்டு கஜேந்திர மோட்சம் நிகழ்த்தப்பட்டது. திரளாக பக்தர்கள் கூடி தண்ணீர் பீச்சி அடித்து யானையை குளிர்வித்தனர். பின்னர் மோட்சம் பெற்ற யானை மும்முறை வலம் வந்தது. பின்னர் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி கோயில் வந்தடைந்தனர். கோயிலில் யாகசாலையிலிருந்த கலசங்களின் புனித நீரால் அபிேஷகம் நடந்து பெருமாள் ஏகாந்த அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் அர்த்த சாமம் பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar