131வது ஜெயந்தி விழா; மலர் அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர்.. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 05:05
காஞ்சி ; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் விழாவை முன்னிட்டு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம், இன்று மே 22 முதல் 24 வரை ஸ்ரீமடத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாத மூலாம்நாய சர்வக்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதிகளின் பரம்பரையில் 68-வது பீடாதிபதியாக ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தை அலங்கரித்து அருள்பாலித்த ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 131-வது ஜெயந்தி விழா க்ரோதி வருஷம் வைகாசி மாதம் 11ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை (24-05-2024) காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தம் வாழ்க்கையிலும், எண்ணத்திலும், வாக்காலும் பக்தர்களின் வாழ்வில் உத்வேகத்தை ஏற்படுத்திய ஸ்ரீ மஹாஸ்வாமிகள் 1994 ஆம் ஆண்டு முக்தி அடைந்தாலும் இன்றும் பிருந்தாவனத்தில் சைதன்யத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஆக்ஞானுஸாரம் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 131-ஆவது ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உற்வச தினங்களில் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாஸங்கள், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் இசைக்கச்சேரிகள் முதலியன நடைபெறும். ஜெயந்தி தினமான இன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் ஸ்ரீ மஹாருத்ர ஜப ஹோமம் முதலியன நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு ப்ருந்தாவனத்தில் மஹாபிஷேகம் நடைபெற்றது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து சங்கீத உபன்யாஸம் நடைபெற்றது.