மங்கலம் முஸ்கந்த நதியில் பழமையான நந்தி கற்சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 07:05
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலம் முஸ்கந்தா நதியில் மிகவும் பழமையான நந்தி கற்சிலை கிடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மங்கலம் முஸ்கந்தா நதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.நேற்று மாலை பாலம் கட்டும் இடத்தில் பாறை இருப்பதால் பாறை அகற்றுவதற்காக வெடிவைத்து அகற்றும் பணி நடைபெற்றது..அப்பொழுது பாறையின் இடுக்கிலிருந்து மிகவும் பழமையான நந்தி கற்சிலை கிடைத்துள்ளது.தகவல் அறிந்த ஊர் மக்கள் விரைந்து சென்று நந்தி கற்சிலையை எடுத்து அருகிலுள்ள கோவிலில் வைத்து பூஜை செய்துவருகின்றனர்.தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சென்று கற்சிலை எப்படி கிடைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அது மட்டும் இல்லாமல் நந்தி சிலை கிடைத்தால் கண்டிப்பாக சிவலிங்கம் சிலையும் இருக்கும் என்று பேசுகின்றனர்.