மேட்டுப்பாளையம் மைக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 03:05
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில் உள்ள, மைக்கண் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில், பழைய சந்தை கடையில் அன்னை பராசக்தி என பக்தர்களால் அழைக்கப்படும், மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 21ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, அம்மன் சுவாமியை அழைத்தும், பூச்சட்டி கரகங்கள் எடுத்தும் வர உள்ளது. 29ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 30ல் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் வராகி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.