Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ...  சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க நிறுவனர் யாசகம் பெற்று வழிபாடு சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்யாமல் திரும்பிய 650 பக்தர்கள்; காரணம் என்ன?

பதிவு செய்த நாள்

29 மே
2024
10:05

கோபேஷ்வர்: உத்தரகண்டில், சார்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக, பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்களை, முறையாக பதிவு செய்யாத காரணத்தால் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்களில், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை, கடந்த 12ம் தேதி துவங்கியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து வரும்படியும், பதிவு செய்யாமல் வருவோருக்கு கோவில்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்றும் உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்ரிநாத் கோவிலை பொறுத்தவரை, தினசரி 20,000 பேர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்ரிநாத் கோவிலுக்கு தரிசனத்துக்காக சென்ற 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், பதிவு செய்யாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து, போலீசார் கூறுகையில், பதிவு செய்யாமல் பத்ரிநாத் கோவிலுக்கு வந்த 650க்கும் மேற்பட்ட பக்தர்கள், கவுச்சார் சோதனைச்சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். பதிவு செய்யாத பக்தர்களை, பத்ரிநாத்துக்கு அழைத்து வந்த ஐந்து டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தவே, பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar