Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வேடசந்தூர் மாரியம்மன் கோயிலில் ... பிளேக் மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பிளேக் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 மே
2024
10:05

ஏற்காடு; சேர்வராயன் குகை கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம், ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், மலை உச்சியில் சேர்வராயன் கோவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 4,500 அடி உயரத்தில் உள்ள இக்கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தீபாராதனை, சுவாமி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மதியம், 2:15 மணிக்கு, தேரில் சேர்வராய பெருமாள், காவேரியம்மாள் சுவாமியை எழுந்தருளச்செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து தேரோட்டம் நடந்தது. உள்ளூர் பக்தர்கள், மக்கள், வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சுற்றுவட்டார மலை கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சுவாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபட்டனர். தேங்காய்கள், சில்லரை காசுகள், காபி கொட்டைகள், மிளகு, கல் உப்பு ஆகியவற்றையும் பக்தர்கள் வாரி இறைத்தனர். அப்போது ஆங்காங்கே பக்தர்கள் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். இதில், 67 மலை கிராமங்களில் இருந்து ஏராளமான மலைவாழ் மக்கள், சேர்வராயன், காவேரியம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.  கோவில் வளாகம் முழுவதும் சுற்றி மாலை, 5:10 மணிக்கு மீண்டும் தேர் கோவிலை அடைந்தது. போக்குவரத்து துறை மூலம் மக்கள் கோவிலுக்கு சென்று வர ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சேர்வராயன்‌ கோவில் மலைப்பாதையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, காபி தோட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar