பிளேக் மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2024 11:05
கோவை; நஞ்சுண்டாபுரம் ரோடில் போத்தனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவிலில் 50ம் ஆண்டு பூச்சாட்டு விழா 25ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகாசி மாதம் மூன்றாவது புதன் கிழமையை முன்னிட்டு இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அம்மன் வேப்பிலைகளுக்கு நடுவில் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.