பதிவு செய்த நாள்
29
மே
2024
05:05
நெய்க்காரபட்டி; பழநி, நெய்க்காரபட்டி அருகே பெரிய கலையம்புத்தூரில் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பழநி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, பெரிய கலையம்புத்தூரில் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே.17., அன்று கொடி மரம் நடுதல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மே.21ல் முகூர்த்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல், சுவாமி சாட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று (மே 28ல்) சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று (மே 29ல்) அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர். திருவிழாவில் நெய்க்காரப்பட்டி, பெரிய கலையம்புத்தூர் சுற்று வட்டார கிராம பக்தர்கள் திரளாக அம்மனை வழிபட்டனர். பழநி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மே 30 இன்று மஞ்சள் நீராட்டு விழா அம்மனை கங்கையில் சேர்த்தல் நடைபெற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.