பதிவு செய்த நாள்
29
மே
2024
05:05
பெ.நா.பாளையம்; தடாகம் ரோடு, சோமையனூர் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
கடந்த, 13ம் தேதி கம்பம் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் சுற்றி ஆடுதல், நகை அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஈசனுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவையொட்டி, வளையல், பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, மிட்டாய், பூ மாலைகள், சேலை உள்ளிட்டவை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள், பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்பு எருது அழைத்தல், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சோமையனூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.