பதிவு செய்த நாள்
29
மே
2024
06:05
பல்லடம்; அருள்புரம் அருகே, 45 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி நடைபெற உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இன்று பாலாலயம் நடந்தது.
பல்லடத்தை அடுத்த, அருள்புரம் பாச்சாங்காட்டுபாளையம் கிராமத்தில், கற்பக விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வரும் இக்கோவிலில், கடந்த, 45 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறவில்லை. தற்போது, கிராம மக்களின் தீவிர முயற்சி காரணமாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, பாலாலய கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, திருமஞ்சன வழிபாடும் இதையடுத்து, விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மனை தீர்த்த கலசங்களில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வு மற்றும் சிறப்பு வேள்வி வழிபாடுகளும் நடந்தன. இன்று காலை, பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டு, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மாரியம்மன் மாகாளியம்மன் கண்ணாடியிலும், வழிபாட்டுக்காக கற்பக விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.