பதிவு செய்த நாள்
29
மே
2024
06:05
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில், அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, சுவாமிக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இந்தாண்டு, அக்னி நட்சத்திரம் கடந்த, 4ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் மூலவருக்கு, 1,008 இளநீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு, 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. பின், பக்தர்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் மாம்பழங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.