திருப்பரங்குன்றம் கோயிலில் ஸ்கேனர் இயந்திரம்; பயன்பாட்டிற்கு வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 10:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை பரிசோதிக்க கோயில் சார்பில் ரூ. 14 லட்சத்தில் ஸ்கேனர் இயந்திரம் அமைக்கப்பட்டது. கோயில் ஆஸ்தான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்கேனர் இயந்திரத்திற்கு நேற்று பூஜை நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி திறந்து வைத்தார். பணியாளர்கள் பங்கேற்றனர். இன்று முதல் ஸ்கேனர் இயந்திரம் பயன்பாட்டிற்கு வருகிறது.