கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன் கோவில் திருவிழா; பாரிவேட்டை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 10:05
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முன்னதாக மே.14 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் சக்தி காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் சாமிகள் கரகங்கள் ஜோடிக்கப்பட்டு முளைப்பாறியுடன் கோவில் வந்தடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேரத்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். மாலை பாரி வேட்டை நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் தலையில் மலர்களை சூடி, கையில் வேல் கம்புடன் , எதிரே புலி வேஷம் அணிந்த இளைஞரை வேட்டையாடுவது போல் பாவனை செய்தனர். இதை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.