திருமயம்: திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று (30ம் தேதி) தமிழகம் வந்தார் .மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் தரிசனம் செய்தார். இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வழிபட்ட பின் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து மதுரைக்கும் வரும் அவர் மீனாட்சி அம்மன்கோவிலும் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அமித்ஷா மீண்டும் தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.