சூலூர்; சூலூரில் பழமையான அத்தனூர் அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், ஆயிரத்து, 400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 31 ஆண்டு திருக்கல்யாண திருவிழா, கடந்த, 14 ம்தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 21ம் தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. 28 ம்தேதி பண்டார வேஷம், அம்மை அழைத்தல் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து தீர்த்தக் குடங்களுடன் அம்மை அழைத்தல் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. 4:00 மணிக்கு மாவிளக்கு மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை கந்தம்பாளையம் முருகசாமி தலைமையில் வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நாளை ஊர் அபிஷேகம் நடக்கிறது. வரும் ஜூன் 4 ம்தேதி மகாமுனி பூஜை மற்றும் படையல் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.