விளையாட்டு மாரியம்மன் கோவிலில் வைகாசி சித்திரை திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 06:05
கோவை; கோவில் மேடு மஞ்சீஸ்வரி காலனியிலுள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் 16 ம் ஆண்டு வைகாசி சித்திரைத்திருவிழா பக்தர்கள் சூழ கோலாகலமாக நடந்தது. திருவிழா கடந்த மே 21 அன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காப்புகட்டுதலும் இரவு 7:00 மணிக்கு பூக்கம்பம் நடுதலும், மே 24 அன்று இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், 28 அன்று இரவு 7:00 மணிக்கு அம்மன் அழைத்தலும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு சக்தி கரகம், பால்குடம், தீர்த்தக்குடம், பால்கரகம், பூவோடு எடுத்தல், அலகு குத்தி ஊர்வலமாக வந்து பாலாபிஷே கம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நாளை இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறு தினம் இரவு 7:00 மணிக்கு கருப்பராயன் முனியப்பன் பூஜை நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்க கோவில் விழாக்கமிட்டியர் அழைப்பு விடுத்துள்ளனர்.