நத்தம், நத்தம் அருகே மெய்யம்பட்டி முனியாண்டி சுவாமி, பாலவிநாயகர் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த மே.28 அழகர்கோவிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வரப்பட்டு விழா தொடங்கியது.பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், நாடகமும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மெய்யம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.