ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள், தற்போது கன மழை பெய்து வருவதால் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (ஜூன்.4) பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் ஜூன் 7 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியிலும், தாணிப்பாறை பகுதியிலும் கன மழை பெய்து ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தினசரி மழை அளவு மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்தினை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சுந்தர மகாலிங்கம் கோயூலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.