நத்தம்; நத்தம் அருகே பரளி-அழகாபுரியில் அய்யனார், கருவளநாச்சி அம்மன், பெரியகருப்பசுவாமி சின்னகருப்புசுவாமி , பட்டசாமி, நொண்டிச்சாமி, ஆண்டிச்சாமி, கன்னிமார் சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் , கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ,தீபாராதனைகள் நடந்தது. நேற்று மாலை வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் அய்யனார் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.