Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை நாளை ... அழகாபுரி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா அழகாபுரி அய்யனார் கோயில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவில்களை அழிப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம்
எழுத்தின் அளவு:
பழமையான கோவில்களை அழிப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
10:06

சென்னை; ‘‘பழமையான கோவில்களை அழிப்பது, வரலாற்றுக்கு நாம் செய்யும் துரோகம்,’’ என, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலய பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை அடையாளம் காண்பதில், மத்திய தொல்லியல் துறையின் ஆலய பாதுகாப்பு பிரிவு, மும்முரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில், 50,000க்கும் மேற்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரை, குறைந்தது, 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட கோவில்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அவை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள, கவனிக்கப்படாத கோவில்களாகவும், அழியும் நிலையிலும் உள்ளன. அவற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டடக்கலை நுணுக்கங்கள் உள்ளன. அவற்றை விரைவாக ஆவணப்படுத்த வேண்டும். அவற்றை, படம் வரைந்தும், புகைப்படம் எடுத்தும், எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்துாரில், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. அங்கு சமீபத்தில் ஆய்வு செய்தோம். அங்கு பழமையான எந்த அமைப்பும் இல்லை. கருவறை முதல் எல்லாவற்றையும் தற்கால பாணியில் புதுப்பித்துள்ளனர். இதுபோல், பல கோவில்களின் பழமை அழிக்கப்பட்டு விட்டது. இது, வரலாற்றுக்குச் செய்யும் துரோகம்.

கோவில்கள், பழைய வரலாற்றை தாங்கி நிற்கும் சாட்சிகள். அவற்றில் உள்ள கல், மண், சிலை, கோபுரம், பிரகாரம் அனைத்தும் வரலாற்றுத் தடயங்கள். அவற்றை அழித்து புதுப்பிப்பது, நம் வரலாற்றை நாமே அழிப்பதற்கு சமம். வரலாறு இல்லாதவர்கள்தான் புதிதாக கட்டுமானங்களை எழுப்புவர். நாம் நீண்ட பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் என்பதை வெளிநாட்டினருக்கும், அடுத்த தலைமுறைக்கும் சொல்ல வேண்டும். அதற்கு, பழமையான கோவில்களை, அதே நிலையில் பராமரித்து, பாதுகாக்க வேண்டும். அதற்கு முன், அவற்றில் உள்ள வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்தி, நுால்களாக்க வேண்டும். அதற்கான பணிகளை விரைவில் துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்தியப் பிரதேசம்; மகா கும்பமேளாவையொட்டி, ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனத்தில் இருந்த ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
கோவை; உ.பி.,யிலுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar