கூடலூர்: மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில், பழங்குடி மக்களின் "பூ புத்தரி திருவிழா நடந்தது.கூடலூர் கோத்தர் வயல் பழங்குடியினர் காலனி அருகேயுள்ள வயலில் நடந்த விழாவில், குலதெய்வத்துக்கு பூஜை செய்து, பாரம்பரிய இசை முழங்க நெற்கதிர்கள் அறுவடை செய்தனர். அறுவடை செய்யப்பட்ட நெற்கதிரை அங்குள்ள பழங்குடியினர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் நெற்கதிரை இரண்டாக பிரித்து, ஒரு கட்டை கூடலூர் அருள்மிகு விநாயகர் கோவிலுக்கும், மற்றொன்றை மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலுக்கும் ஊர்வலமாக எடுத்து சென்றனர். கோவில்களில் நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின் விவசாயிகளுக்கு வழங்கினர்.