சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 03:06
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி திருவிழா கொடியேற்றம் இன்று காலை 10:30 மணிக்கு நடந்தது.
வெங்கடாஜலபதி கோயில் ஆணித்திருவிழா 12 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற ஜூன் 22 ல் நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை 10:30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி கோயிலில் நடந்தது. சீனிவாச பட்டர் கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தார். தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.