சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2024 01:06
சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
சங்கரன்கோவில் சங்கர்நகர்2ம் தெருவில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த6ம் தேதி இரவு 8.30 மணிக்கு சக்தி கும்பம் நிறுத்துதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. 9ம் தேதி ஐந்தாம் கரகம் நிகழ்ச்சியும், சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. 12ம் தேதி அர்ச்சுனன் தவக்கோலத்துடன் பாசுபதாஸ்திரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. 13ம் தேதி திரவுபதி அம்மன் கூந்தல்முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை9 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை6:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நுாற்றுக்கும் அதிகமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று (15ம் தேதி) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், நாளை (16ம் தேதி) ஊஞ்சல்மற்றும் அன்னதானம் நடக்கிறது. 18ம் தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கதலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி உட்பட பலர்கலந்து கொண்டனர்.