ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோயிலில் வஸந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2024 01:06
ஸ்ரீவைகுண்டம்; ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோயில் வஸந்த உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், தினமும் காலை 7.00 மணிக்கு நாலாயிர திவ்யப்பிரபந்தமும், 10.30 மணிக்கு சடாரி கோஷ்டியுடன் வழிபாடுகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு சாயரட்சையும், 6.00 மணிக்கு தோளிக்கினியானில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கள்ளப்பிரான் சுவாமி புறப்பாடும், அதன்பின்பு சுற்றி தண்ணீர் நிறைக்கப்பட்ட தாமரை மலர்கள் நிறைந்த நீராழி வஸந்த மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு தீபாராதனையும், அத்யாபகர்கள் சீனிவாசன் பார்த்தசாரதி, சீனிவாச தாத்தம், வைகுண்ட ராமன் ஜெகன் ஆகியோர் நாலாயிர திவ்யப் பிரபந்தம் சேவித்தனர். தீர்த்தம் சடாரி கோஷ்டி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி முலஸ்தானத்திற்கு எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன் ராமானுஜம் சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.