பதிவு செய்த நாள்
15
ஜூன்
2024
01:06
உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் உண்டியலில், ரூ.19 லட்சத்து 55 ஆயிரத்து 986 வசூலானது. குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயிலில் உள்ள16 உண்டியல்களில், ஒரு மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை எண்ணப்பட்டது. சங்கரன்கோவில், சங்கரநாராயணர்சுவாமி கோயில்துணைஆணையர், செயல்அலுவலர் கோமதி முன்னிலையில், உண்டியல் திறப்பு நடந்தது. இதில், பக்தர்கள் காணிக்கையாகரூ.19 லட்சத்து 55ஆயிரத்து 986 ரூபாய் ரொக்கமாக கிடைத்தது. தங்கம் 68 கிராம் 700 மி.கிராம், வெள்ளி344 கிராம் 500 மி. கிராம் கிடைக்க பெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வர்பகவதி, அறங்காவல குழு தலைவர்கண்ணன், அறங்காவலர்கள் கணேசன், மகாராஜன், வெங்கடேஸ்வரி, கோயில் கணக்கர்டிமிட்ரோ மற்றும் துாத்துக்குடி ஆதிபராசக்தி மன்றத்தினர், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.