காரைக்குடி; காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் இன்று நடைபெறுகிறது. காரைக்குடி செக்காலையில் உள்ள ஸ்ரீ சங்கர மணிமண்டபத்தில் 13வது ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம் நடைபெறுகிறது. நேற்று காலை கலைமாமணி கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவத மக்கள் சார்பில் அஷ்டபதி பஜனை நடந்தது. தொடர்ந்து இரவு திவ்ய நாமபஜனையும் நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி பஜனையும் மதியம் 12 மணி முதல் 12.30 மணிக்குள் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சந்திரசேகர், சிவக்குமார் செய்து வருகின்றனர்.