முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே இறைச்சிகுளத்தில் பேராயிரம் மூர்த்தி அய்யனார் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் தூக்கி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்பு பேராயிரம் மூர்த்தி அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பொங்கல் வைத்தும், கிடா வெட்டி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பலரும் கலந்து கொண்டனர்.