ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இது பீமன் அனுஷ்டித்த ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்டம் அடைவார்கள். இந்த விரதத்தால் ஒருவரின் பல தலைமுறையும் பாவத்தில் இருந்து விடுபடும். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். இன்று பெருமாளை வழிபட நினைத்தது நிறைவேறும்.