வானரத்தை பிடித்து வனத்தில் விடுங்க; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 03:06
மேலுார்; மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் உப கோயிலான திருவாதவூரில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலில் குரங்கு (வானரம்) அதிகமாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பூஜை பொருட்களை பிடுங்குகிறது தர மறுப்பவர்களை கடிக்கிறது. தவிர கோயிலில் விற்பனைக்கு வைத்திருக்கும் பிரசாதம் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டி பொங்கல் வைக்கும் பக்தர்களை தொந்தரவு செய்கிறது. கோயிலில் போடப்பட்டுள்ள பந்தல் மீது குதித்து விளையாடுவதோடு கோபுரங்களில் உள்ள மின்விளக்குகளை சேதப்படுத்துகிறது. அதனால் அறநிலையத்துறையினர் வனத்துறை மூலம் வானரங்களை பிடித்து வனத்தில் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.