காரைக்குடி; பக்ரீத் பண்டிகையையொட்டி, காரைக்குடி வ.உ.சி., ரோடு ஈதுகா மைதானத்தில், காரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில்
சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடந்த தொழகையில் ஜமாத் தலைவர் அப்துல் ரகுமான் செயலாளர் அலி மஸ்தான் பொருளாளர் சாதிக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி, காட்டுத்தலைவாசல் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது. பாண்டியன் திரையரங்க திடலில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் சார்பிலும், பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், புதுவயல், கானாடுகாத்தான் பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.