பதிவு செய்த நாள்
19
ஜூன்
2024
11:06
புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 21ம் தேதி தேர் திரு விழா நடக்கிறது.
வில்லியனுார், பெருந்தேவியார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 20,வது ஆண்டு தேர் திருவிழா கடந்த, 12,ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம், கருட வாகனத்திலும், நேற்று யானை வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்குஅருள் பாலித்தார். இந்த நிலையில் வரும் 21,ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்கிறது. திருக்கோவிலுார், 26வது பட்டம் தேகளிச ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து துவங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் பங்கேற்கவும் உள்ளனர். மேலும், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், இந்து சமய நிறுவன செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர், இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த தேர் உற்சவம் வரும், 25,ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.