Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவிலில் கல்வட்டம் ... வேம்பத்தூர் பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா வேம்பத்தூர் பூமி நீளா சுந்தரராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழா; அம்மையார், பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனித்திருவிழா; அம்மையார், பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2024
01:06

காரைக்கால்; காரைக்காலில் மாங்கனித் திருவிழாவின் முன்னிட்டு அம்மையார், பரமதத்தர் திருக்கல்யாணம் வெகுவிமர்ச்சியாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இன்று சீர்வரிசையுடன் குதிரையில் வந்த பரமதத்தர் செட்டியாரை புனிதவதி தாயார் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் காரைக்கால் அமையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.பின் புனிதவதியார் பச்சை பட்டுபுடவை உடுத்தி பவழமாலை அணிந்து மணமகள் கோலத்தில் எழுந்தளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது. காலை 11மணிக்கு கெட்டி மேளம் முழுங்க ஆலய குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது.திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சல், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூலபை வழக்கப்பட்டது. பின் மாலை ஸ்ரீபிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன்,எம்.எல்.ஏ.நாஜிம்,கலெக்டர் மணிகண்டன்,துணை ஆட்சியர் ஜான்சன்,மாவட்ட எஸ்.பி.,கள் சுப்ரமணியன்,பாலச்சந்தர்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு இடங்களில் போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். நாளை 21ம் தேதி மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar