வேம்பத்தூர் பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 03:06
மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை உற்சவர் சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,சந்தனம், குங்குமம்,திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் ஹோமங்கள் வளர்த்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.