ஆனி இரண்டாவது சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2024 12:06
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் ராஜ அலங்காரத்துடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.