பதிவு செய்த நாள்
12
நவ
2012
10:11
திருச்சி: காவிரியில் நிரந்த நீர்வரத்து வேண்டி, பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. வரும் ஆண்டுகளில் காவிரியில் குறித்த காலத்தில் நிரந்தர நீர்வரத்து கிடைக்க வேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறித்த நேரத்தில் மழை பெய்யவும், விவசாயம் தழைத்தோங்கவும், துலா மாதம் மஹா பிரதோஷ தினமான நவ.11, பஞ்சபூத ஸ்தங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில், பிரதோஷ கால பால்குட அபிஷேகம் நவ.11 நடந்தது. அதை முன்னிட்டு, மயிலாடுதுறை அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திர குருக்கள் தலைமையில், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து, வேதம், சிவாகமம், திருமுறை மந்திரங்களுடன், பால் குடங்களை ஏந்தி பக்தர்கள் யானையுடன் ஊர்வலமாக கிளம்பினர். இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் தங்கமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊர்வலமாக கொண்டு வரப்பப்பட்ட பால்குடங்களை கொண்டு, நந்தியம்பெருமான், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு, பிரதோஷக் காலத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தின்போது நடந்த கூட்டுப்பிரார்த்தனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.