பதிவு செய்த நாள்
12
நவ
2012
10:11
தமிழக கோவில்களில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், "திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற அமைப்பு செயல்படுகிறதா என, கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், கோவில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவில் சொத்துகளின் பாதுகாப்பு பற்றி கேள்வி எழுந்துள்ளது. இதில், ஏற்கனவே காணாமல் போன, கோவில் சொத்துகள் மீட்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த, 1999 முதல் 2010 வரை உள்ள, 12 ஆண்டுகளில், 215 திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில், 415 ஐம்பொன் சிலைகளும், 175 கற்சிலைகளும் அடங்கும். ஆனால், 30 கற்சிலைகளும், 25 ஐம்பொன் சிலைகளுமே மீட்கப்பட்டுள்ளன. நடந்த, 215 திருட்டுச் சம்பவங்களில், 16 சம்பவங்களில் மட்டும், திருடப்பட்ட கோவில் நகைகள்
மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படை:கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்காக, "திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2005 - 06ம் ஆண்டில், 1,000 இரண்டாம் நிலை காவலர்களும், 3,000 முன்னாள் ராணுவ அதிகாரிகளும் நியமிக்க ஆணையிடப்பட்டது. ஆனால், அப்போதே, 1,000 இரண்டாம் நிலை காவலர்களும், 2,751 முன்னாள் ராணுவ வீரர்கள் மட்டுமே நியமிக்கப் பட்டனர்.கடந்த ஆண்டில், காவலர்களின் எண்ணிக்கை, 717 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை,1,806 ஆகவும் குறைந்துள்ளது. அதற்கு திருக்கோவில் பாதுகாப்பில், போதிய கவனம் செலுத்தாததே காரணம் என, கூறப்பட்டது.
பொருளாதார பங்களிப்பு இருந்தால், பாதுகாப்பு படையில் ஆர்வம் அதிகரிக்கும் என எண்ணிய தமிழக அரசு, மாத தொகுப்பூதியத்தை, 1,500லிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தியது. ஆனால், இன்று வரை பாதுகாப்புப் பணியில், ஆர்வம் அதிகரிக்கவில்லை.சிறு கோவில்களில்... இது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக அளவில் வருமானமும், நகையும் உள்ள, கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக, கருவறைக்குள் தனி அறை அமைத்து, அதை பொறுப்பாளர்கள் அன்றி, வேறு எவரேனும் தொட்டால், ஒலி எழுப்பும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். இதனால், அன்னியர்கள் நுழைவதற்கு வாய்ப்பில்லை.மேலும், தற்போது நடந்து வரும் கொள்ளை சம்பவங்கள் அனைத்தும், சிறிய கோவில்களில் நடப்பவை. இதனால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுவதில்லை.
இருந்தாலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பாதுகாப்பில்லைஇதை முற்றிலும் மறுக்கும் சமூக ஆர்வலர்கள், "பல கோடி ரூபாய் வருமானமுள்ள கோவில்களில் மட்டுமே, இம்முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், லட்சக்கணக்கில் வருமானமுள்ள கோவில்களில் எந்த பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.வயதானோர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, சரிவர பலனளிப்பது இல்லை