சுசீந்திரம், புதுக்கிராமம் தேரூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத உதய மார்த்தாண்ட விண்ணவர எம்பெருமாள் கோவிலில் ஆனி மாத திருவோண நட்சத்திரத் தையொட்டி திருவோணம் சிறப்பு பூஜை நடந்தது. காலையில் அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மாலையில் துர்க்கை அம்மன் சன்னதியில் திரு விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினர். அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு உதய மார்த்தாண்ட விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் சன் னதி, எம்பெருமாள் சன்னதி ஆகிய சன்னதிகளில் தீபாரா தனை நடந்தது. ஸ்ரீதேவி பூதே வியுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எம்பெருமாளை எழுந்தருள செய்து தீபாராதனையும், ஊஞ்சல் சேவையும் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி யிருந்த எம்பெருமாள் வாகனத்தை முத்துக்குடையுடன் பக்தர்கள் மேளதாளம் முழங்க கோவிலின் வெளிப்பிரகா ரத்தை சுற்றி மூன்று முறை வலம் வர செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வாகன சேவை முடிந்த பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.