பழநி:பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலையில் குண்டங்கள் அமைக்கப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. நான்கு கால வேள்விக்கு பின் மூலவருக்கு காப்புக்கட்டுதல், சக்தி செலுத்துதல் நடந்தது. மூலவர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், பரமபதவாசல் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.