பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
10:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல், பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று பொதுவழியில் மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.