மதுக்கரை மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2024 10:07
கோவை; மதுக்கரை வட்டம், மதுக்கரை மலைமேல் சுயம்பு மூர்த்தியாக தர்மலிங்கேஸ்வரர் உள்ளார். இயற்கைச் சூழலில் அமைந்த மலை தருமலிங்க மலையாகும். கயிலை மலை அமைப்பில் மலையின் மேல்பகுதி அமைந்துள்ளது. பேரூர்க்கு வந்து வழிபட்ட காமதேனு தருமலிங்கரை வழிப்பட்டுள்ளது. பரசுராமன் தருமலிங்க மலைக்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். சித்தர் பலர் இங்கு வழிபட்டுள்ளனர். சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் ஈசன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.