உலகின் முதல் நடராஜர் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 11:01
நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது விடிய விடிய சுவாமி நடராஜ பெருமானுக்கு குடம் குடமாக பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் கோ பூஜையும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்றுள்ள நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை மாலை இரண்டு வேலைகளிலும் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது தொடர்ந்து பத்தாம் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு அழகிய கூத்தருக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது தொடர்ந்து சபா மண்டபத்தில் எழுந்தருளிய அழகிய கூத்தர் பெருமானுக்கு குடம் குடமாக பால் மஞ்சள் தயிர் இளநீர் தேன் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோ பூஜை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.