பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி, நாராயணி பீடத்தில், 10 ஆயிரத்து எட்டு நெய் தீபங்களால் ஸ்ரீ சக்ரம் அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சக்தி அம்மா நெய் தீபத்தை ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்தார். நெய் தீபங்களை பக்தர்கள் ஏற்றினார்கள். தீபாவளி அன்று நெய் தீபத்தால், ஏற்றப்பட்ட ஸ்ரீ சக்கரத்தில் முன் அன்னை மங்கள நாராயணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் ஸ்ரீ சக்கரத்துக்கு, சக்தி அம்மா சிறப்பு பூஜைகள், விசேஷ ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், கலந்து கொள்பவர்கள், "ஏழ்மை நீங்கி, செல்வம் பெருகி, தேக ஆரோக்கியமாகவும், தொழில் முன்னேற்றம், வியாபாரம் பெருகவும், திருமணம், சந்தான பாக்கியம் போன்ற தடைகள் நீங்கவும், பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவும், அனைத்து பாக்கியங்கள் பெற்று ஆனந்தமாக, சந்தோஷமாக வாழலாம் என சக்தி அம்மா கூறினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாவளியையொட்டி வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக் கோவிவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீபாவளியையொட்டி தங்கக் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாக காட்சி அளித்தது.